சிக்ஸ்பேக் முயற்சியில் சில நடிகைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகின்றனர். அம்மா நடிகைக்கும் மகள் நடிகைக்கும் ஜோடியாக நடித்த ஹீரோக்களும் தமிழ் திரையுலகில் உண்டு. ஆனால் நடிகைகளை பொருத்தவரையில் ஒருசிலரை தவிர பெரும்பாலான நடிகைகள் ஒருசில ஆண்டுகளில் தங்கள் மார்க்கெட்டை இழந்துவிடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் நடிகைகளின் உடல் எடை கூடிவிடுவதுதான் என்று கூறப்படுவதுண்டு.
ஆனால் தற்போதைய நடிகைகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக ஜிம்முக்கு சென்று தங்கள் உடலை கட்டுடன் வைத்திருப்பதுடன் சிக்ஸ்பேக் உடலமைப்புக்கும் சில நடிகைகள் முயற்சிப்பதாக தெரிகிறது.
குறிப்பாக அஞ்சலி, ஆண்ட்ரியா மற்றும் திருமணத்திற்கு பின்னரும் தென்னிந்திய திரையுலகில் பிசியாக இருக்கும் சமந்தா ஆகியோர் ஜிம்மில் ரெகுலராக பயிற்சி பெற்று ஹீரோயினிக்கு உரிய உடல் தகுதியில் தொடர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments