'துர்கா'விற்கு கிடைத்த அங்கீகாரம் கிடைத்துவிட்டது: நடிகை துஷாரா விஜயன்

  • IndiaGlitz, [Thursday,August 01 2024]

’ராயன்’ திரைப்படத்தில் நான் நடித்த துர்கா கேரக்டருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என நடிகை துஷாரா விஜயன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், திரு.தனுஷ் அவர்கள் இயக்கிய 'ராயன்' திரைப்படத்திற்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு பெரிய நன்றிகள். என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும், அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும்.

படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றிப்படமாக 'ராயன்' உருமாறியிருக்கும் வரையிலான பயணம் மிகப்பெரியது. வெகுசன மக்களிடம் என் கதாபாத்திரம் உட்பட ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

எங்கள் இயக்குநர் திரு. தனுஷ் அவர்களுக்கும், சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கும் பெரிய, பெரிய நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். 'துர்கா'விற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால் அது மிகையில்லை.

தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன்.

இவ்வாறு துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.

 

More News

ஒரே படத்தில் 4 பிரபலங்களின் வாரிசுகள்.. ஜேசன் சஞ்சய் திட்டம் பலிக்குமா?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும்

ரஜினி, அஜித், எஸ்கே: தீபாவளி ரிலீஸ் ரேஸில் இணைகிறதா இன்னொரு பிரபல நடிகரின் படம்?

வரும் தீபாவளி தினத்தில் ரஜினிகாந்த், அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னொரு பிரபல நடிகரின் படமும் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுவது

வயநாடு நிலச்சரிவு.. இரங்கல் மட்டும் தெரிவிக்காமல் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்த நடிகர்..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்தனர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் குடும்பத்தின் முக்கிய நபர்..அதிர்ச்சி புகைப்படம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் குடும்பத்தின் முக்கிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

வயநாடு நிலச்சரிவு.. நிவாரண பணிக்கு களத்தில் இறங்கிய சசிகுமார் பட நாயகி..!

கேரள மாநிலம் வயநாடு அருகே திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில் பல தன்னார்வ தொண்டர்கள் தற்போது நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.