காதலில் விழுந்துவிட்டாரா நடிகை துஷாரா விஜயன்? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற வெற்றி திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் பா.ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகருகிறது’ என்ற படத்தில் நடித்தார் என்பதும் இந்த இரண்டு படங்களின் வெற்றி தமிழ் சினிமாவில் துஷாராவுக்கு நல்ல ஒரு இடத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் ’அநீதி’ உள்பட ஒரு சில படங்களில் துஷாரா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் துஷாரா அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் பா. ரஞ்சித் இயக்கிய படங்களில் நடித்த நடிகர் ஹரிகிருஷ்ணனுக்கு திடீரென பிறந்தநாள் வாழ்த்துக்களை துஷாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அதில் ’என்னுடைய ஹரி’ என்று குறிப்பிட்டிருந்ததை அடுத்து அவர் ஹரிகிருஷ்ணனை காதலிக்கிறாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஏற்கனவே நட்சத்திர ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஹரி கிருஷ்ணா-துஷாரா ஜோடியும் திருமணம் செய்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments