முடிந்தவரை மூடியிருக்கின்றேன்: அட்வைஸ் செய்த 'அண்ணா'வுக்கு நடிகை பதில்

  • IndiaGlitz, [Saturday,June 01 2019]

'ஹாப்பி வெட்டிங்’, ’மேட்ச் பாக்ஸ்' போன்ற படங்களில் நடித்தவர் பிரபல மலையாள திரிஷ்யா ரகுநாத். இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஒரு நெட்டிசன் அவருக்கு ஒரு சகோதரராக அட்வைஸ் செய்திருந்தார். அதில் இப்படி ஒரு கவர்ச்சி படத்தை வெளியிட்டு ஏன் உங்கள் இமேஜை நீங்களே கெடுத்து கொள்கிறீர்கள். ஒரு சகோதரனின் இந்த அட்வைஸை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறியிருந்தார்.

இந்த அட்வைஸுக்கு பதிலடி கொடுத்த நடிகை திரிஷ்யா ரகுநாத், 'இந்த புகைப்படத்தில் நான் எல்லாவற்றையும் முடிந்தவரை மூடிக்கொண்டு தான் இருக்கின்றேன். குறிப்பாக நான் என்னுடைய மார்பகத்தையும் மூடிதான் உள்ளேன். இயற்கையாக அமைந்த ஒரு உறுப்பை வெட்டி எறியமுடியாது. அதனை நான் ஒருபோதும் வெளிக்காட்டவும் விரும்ப மாட்டேன். எனக்கு அட்வைஸ் சொல்வதற்கு பதில் நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொண்டால் இந்த பிரச்சனை வந்திருக்காது' என்று கூறினார்.

நடிகை திரிஷ்யா ரகுநாத்தின் இந்த பதிலுக்கு ஒருசில எதிர்ப்புகளும், பெரும்பாலானோர் ஆதரவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது