இடுப்புக்கு கீழே அறுவை சிகிச்சை செய்தேனா? நடிகை திவ்யபாரதியின் ஆதங்க பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சுலர்’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் அந்த படத்தில் நாயகியாக நடித்த திவ்யபாரதி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டு வருகிறார். அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து அவரது உடல் அமைப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில் அவர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த பதிவு நிச்சயமாக எதையும் விளக்கவோ அல்லது நிரூபிக்கவோ அல்ல, ஆனால் நம்மிடம் இருக்கும் குறைபாடுகள் நம்மை பலப்படுத்தும் என்பதற்காகவே.
சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது என்றும், நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் என்றும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்றும் சிலர் விமர்சனம் செய்கின்றனர்.
நான் எலும்புக்கூடு போல் இருப்பதாகவும், பிக் பட் கேர்ள் என்றும் விமர்சனம் பெற்றுள்ளேன். எனது கல்லூரி நாட்களில் கூட எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து படம் வரைந்துள்ளார்.
இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல; என் இடுப்பு எலும்பு அமைப்பு இயற்கையில் பரந்ததாக உள்ளது.
பின்னர் 2015 ஆம் ஆண்டு, நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன். நான் பதிவு செய்யும் ஒவ்வொரு புதிய பதிவிலும் எனக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. நான் ஜிம்மிற்கு சென்றதே இல்லை, ஆனாலும் பலர் எனது வொர்க்அவுட் என்ன என்று கேட்கத் தொடங்கினர். எனது உடல் அமைப்பை பலரும் ரசித்ததை அறிந்து வியந்தேன். நாம் இருக்கும் எல்லாவற்றிற்கும் எப்போதும் வெறுப்பவர்களும் நேசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
அப்போதிருந்து நான் என் உடலைத் தழுவ ஆரம்பித்தேன், அது என் நம்பிக்கையை வளர்த்தது. வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றியது என்பதை நினைவூட்டுவதற்கு அந்த நாட்களில் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் நான் உண்மையிலேயே விரும்புகிறேன்!
விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம். இதில் நான் உங்களுடன் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்!!! என்று நடிகை திவ்யபாரதி பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com