இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சருக்கு பிரபல நடிகை பாராட்டு

  • IndiaGlitz, [Friday,May 31 2019]

பாரத பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது நிதியமைச்சராகவும் இருந்தார். ஆனால் நிதித்துறைக்கு என தனியாக ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றிருப்பது இதுதான் முதல்முறை. ஆம், நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு இன்று நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்பதால் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மாற்றுக்கட்சியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வரும் கர்நாடக முதல்வர் குமாராசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிம்பு, தனுஷ் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குத்து' ரம்யா என்ற திவ்யா ஸ்பாந்தனா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

1970ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஒரு பெண் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்று கொண்டதில் பெருமை அடைகிறேன். அதே நேரத்தில் அவர் பதவியேற்றபோது, இந்தியாவின் ஜிடிபி பெருமைப்படும் அளவுக்கு இல்லை. நிதியமைச்சர் இதனை விரைவில் சரிசெய்வார் என நம்புகிறேன்' என நடிகை திவ்யா குறிப்பிட்டுள்ளார்.