'மகாநதி' சீரியலில் இருந்து விலகல்.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் நாயகி ஆக நடித்து வரும் திவ்யா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் ஆரம்பத்தில் பார்த்திபா என்பவர் நாயகி ஆக நடித்த நிலையில், திடீரென அவர் அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனை அடுத்து திவ்யா என்ற நடிகை இந்த சீரியலில் நாயகி கங்கா கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது அவரும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறிய போது ’தனக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ‘மகாநதி’ படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார்.
என்னுடைய உடல்நல குறைவு காரணமாக ‘மகாநதி’ சீரியலில் இருந்து விலகுவதாகவும் நான் நடித்த கேரக்டரில் வேறொரு நடிகையை தேட வேண்டிய நிலை ‘மகாநதி’ குழுவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கங்கா கேரக்டரில் தொடர்ந்து நடிக்க முடியாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், தனக்கு இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் கண்டிப்பாக மீண்டும் உங்களை வேறொரு சீரியலில் சந்திப்பேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments