close
Choose your channels

திவ்யபாரதியின் நம்ப முடியாத போட்டோஷூட்.. ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ்..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சுலர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை திவ்யா பாரதி. அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் தற்போது நடந்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் திவ்யா பாரதியின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெல்லிய ஆடையுடன் கூடிய போட்டோஷூட், நீச்சல் குளம் போட்டோஷூட் உட்பட பலவிதமான கிளாமர் புகைப்படங்களை அவர் கடந்த சில மாதங்களாக பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் சிகப்பு நிற சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் பதிவு செய்த புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தன.

இந்த நிலைகள் தற்போது அவர் சேலையில் மங்களகரமாக, மகாலட்சுமி போல் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சிரியம் அடைந்துள்ளனர். ’சேலையில் பார்க்கிறப்ப நீங்க மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க, அப்புறம் ஏன் மாடர்ன் டிரஸ்ல போட்டோஷூட் எடுக்கறீங்க’ என்று பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஒரு சில மணி நேரங்களில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ள நிலையில் இனி அடிக்கடி அவர் சேலை காஸ்ட்யூம் மேலும் சில போட்டோஷூட் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment