சிங்கிள் பீஸ் பிகினி உடையில் 'பேச்சிலர்' திவ்யபாரதி.. குவியும் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Friday,September 01 2023]

ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்ய பாரதி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் சிங்கிள் பீஸ் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் நடித்த ‘மதில் மேல் பூனை’ உள்பட ஒரு சில படங்களில் திவ்யபாரதி நடித்துள்ளார். மேலும் அவர் கவின் நடித்து வரும் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் திவ்யபாரதி அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் சிவப்பு கலரில் சிங்கிள் பீஸ் பிகினி உடை தண்ணீரில் இருந்து படிகள் மேல் ஏறி வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்துள்ளது.