டுவிட்டரில் இணைந்த தமிழ் நடிகையின் மகள்: முதல் பதிவில் தளபதி விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகினர் உள்பட உலகில் உள்ள முக்கிய செலிபிரிட்டிகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து இருப்பார்கள் என்பதும் தாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் உள்பட பல அப்டேட்களை அதில் பதிவு செய்வார்கள் என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் டுவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் தற்போது பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகையான தேவதர்ஷினியின் மகள் நியதி டுவிட்டரில் இணைந்துள்ளார்.
குணசித்திர மற்றும் காமெடி நடிகை தேவதர்ஷினி மகள் நியதி, விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தில் சிறுவயது தேவதர்ஷினி ஆக நடித்து இருப்பார் என்பதும், அவருடைய நடிப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நியதி டுவிட்டர் உலகில் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளதாக அறிவித்துள்ளார் மேலும் தனது முதல் பதிவாக தளபதி விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’வெறித்தனம் விஜய் அண்ணா, மாஸ்டர் பொங்கல்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது
Happy To join Twitter world ??#MasterPongal
— Niyati Devadharshini (@NDevadharshini) January 19, 2021
verithanam Anna @actorvijay
#96 pic.twitter.com/ALDAJjhD5B
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments