close
Choose your channels

96-இல் நடித்த சுட்டிப் பெண்ணா இது? ஹீரோயின் போல வளர்ந்துவிட்ட வைரல் புகைப்படங்கள்!

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் சி.பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான ‘96‘ திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பிரபல காமெடி நடிகை ஒருவருடைய மகள் புகைப்படம் கடந்த சில தினங்களாக இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதையடுத்து தமிழ் சினிமாவிற்கு மற்றொரு ஹீரோயின் கிடைத்து விட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சிரீயல்கள் மற்றும் சினிமாக்களில் குணச்சிர வேடம் மற்றும் காமெடி வேடங்களில் படு பிசியாக நடித்துவரும் நடிகை தேவதர்ஷினி தன்னுடன் நடித்த நடிகர் சேத்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் இந்தத் தம்பதிகளுக்கு நியதி எனும் ஒரு மகள் இருப்பதும் ரசிகர்கள் அறிந்ததுதான். நடிகை தேவதர்ஷினி, நடிகர் சேத்தன் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் படு பிசியான நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘96’. திரைப்படத்தில் நடிகை தேவதர்ஷினி அவர்களுடைய தோழியாக நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை தேவதர்ஷினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் அவருடைய சொந்த மகள் நியதியே நடித்திருந்ததும் அவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அப்போது பள்ளி மாணவியாக 96 திரைப்படத்தில் நடித்திருந்த நியதி தற்போது நன்றாகவே வளர்ந்த்திருக்கிறார். மேலும் அவ்வபோது ஹீரோயின்போல போட்டோஷுட் புகைப்படங்களையும் எடுத்து வருகிறார். அந்தப் புகைப்படங்களை நடிகை தேவதர்ஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதனால் நடிகை தேவதர்ஷினி தன்னுடைய மகள் நியதிக்கு பட வாய்ப்பு தேடிவருகிறாரா? என்பது போன்ற கமெண்ட்ஸ்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் நியதி ஏற்கனவே மலையாளத்தில் உருவாகிவரும் ‘ராணி’ எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்துவருகிறார்.

இதையறிந்த இன்னும் சில ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு மற்றொரு ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்று உற்சாகமாக கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment