புயல் பாதிப்பு பகுதியில் போட்டோஷூட்: நெட்டிசன்கள் கண்டனத்திற்கு நடிகை விளக்கம்!

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

புயல் பாதிப்பு நடந்த பகுதியில் போட்டோஷூட் எடுத்த நடிகை ஒருவருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருவதை அடுத்து நடிகையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் டவ்தேவ் புயல் புரட்டி எடுத்தது என்பதும் இந்த புயலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் நான்கு பேர் இந்த புயலால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் புயல் பாதிப்பு அடைந்த பகுதிகளில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை தீபிகா சிங் என்பவர் போட்டோஷூட் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து என்று கேப்ஷனாக ‘புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும்’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு துன்பத்தில் இருக்கும் நிலையில் அந்த இடத்திற்கே சென்று போட்டோ ஷூட் எடுத்தது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்

ஆனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை தீபிகாசிங் எங்கள் வீட்டின் முன்னால் புயல் காரணமாக விழுந்து கிடந்த சில மரங்களுக்கு மத்தியில் தான் நாங்கள் சில புகைப்படங்களை எடுத்தோம், மற்றபடி புயல் பாதித்த பிற பகுதிகளுக்கு நாங்கள் செல்லவில்லை. மேலும் எங்கள் பகுதியில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தை தொடர்ந்தும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.