ஹாலிவுட் படத்தை தவறவிட்ட ரஜினி நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் நடிகைகள் பாலிவுட்டுக்கு செல்ல ஆசைப்படுவதும், பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்டுக்கு செல்ல ஆசைப்படுவதும் வழக்கமான ஒன்றே. இந்நிலையில் ஹாலிவுட் பட வாய்ப்பு ஒன்றை பிரபல பாலிவுட் நடிகையும், கோச்சடையான் நாயகியுமான நடிகை தீபிகா படுகோனே தவற விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் தீபிகா 'ராம்லீலா' படத்தில் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டதாகவும், இனிமேல் ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிக்கவுள்ளதாகவும் தீபிகா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தீபிகா படுகோனே நடித்த 'தமாஷா' படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com