குழந்தை தனமா இருக்கு… கணவரிடம் சண்டை போடும் பாலிவுட் நடிகையின் வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நட்சத்திரமான நடிகை தீபிகா படுகோன் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதோடு இவரை இன்ஸ்டாவில் பாலோ செய்யும் ரசிகர் பட்டாளமும் ஏராளம். மேலும் ஒரு பிரபல நடிகருக்கு கொடுக்கப்படும் அளவிற்கு இவருடைய படங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அந்த வகையில் பாலிவுட்டில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை தீபிகா.
கன்னக்குழி அழகி, மறைந்த நடிகை ஸ்ரீதேவியை வியக்க வைத்த அழகி இப்படி பல அடையாளங்களுடன் சுற்றி வரும் நடிகை தீபிகா பாலிவுட் நடிகர் ரன்வீரை 6 வருடங்கள் காதலித்து பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தங்களது 3 ஆண்டு திருமண நாளை சிறப்பித்த இந்த ஜோடி தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வபோது தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடும் நடிகை தீபிகா தற்போது நடனம் ஆடும் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த நடனத்திற்கு இடையில் நடிகர் ரன்வீரும் இணைந்து கொள்கிறார். இருவரும் இணைந்து நடனம் ஆடும் இந்த வீடியோ Werk it baby என்ற கேப்ஷனுடன் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments