நடிகை அளித்த புகார்.. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஆட்சி மாற்றத்தால் அதிரடி நடவடிக்கை..

  • IndiaGlitz, [Saturday,September 21 2024]

நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மும்பையை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் அழகி காதம்பரி ஜேத்வனி என்பவர் மும்பை மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரை வாபஸ் பெற வைக்க தெலுங்கானா மாநிலத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் நடிகை மீது புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யாமல், நடிகை காதம்பரி கைது செய்யப்பட்டதாகவும், அதனை அடுத்து புகாரை வாபஸ் பெற வைக்க போலீசார் துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. பின்னர் காதம்பரி தனது புகாரை வாபஸ் பெற்று ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், தற்போது ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்து, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், நடிகை காதம்பரி தன்னை பொய்யான வழக்கில் கைது செய்து துன்புறுத்தியதாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆட்சியில் உளவுத்துறை டி.ஜி.பி. அதிகாரியாக இருந்த சீதாராம ஆஞ்சநேயலு, முன்னாள் விஜயவாடா கமிஷனர் கிராந்தி ராணா டாடா, துணை கமிஷனர் விஷால் குன்னி ஆகிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.