பாடகி சுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபல நடிகை.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும், அந்த வீடியோக்களில் பழம்பெரும் திரையுலக பிரபலங்கள் முதல், தற்போதைய பிரபலங்கள் வரை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக, இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் குறித்து அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு இயக்குனர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதேபோல், மணிமேகலை, பிரியங்கா விவகாரங்களிலும் அவர் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், பிரபல நடிகை ரீமா கல்லிங்கல் மீதும் அவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். நடிகை ரீமா கல்லிங்கல் போதை மருந்து விருந்து நடத்தியதாகவும், அதில் இளம் பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டதாகவும், இந்த விருந்து காரணமாக தான் அவரது சினிமா வாழ்க்கை வீழ்ச்சி அடைந்ததாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகை நடிகை ரீமா கல்லிங்கல் , தற்போது தன் மீது ஆதாரம் இல்லாத புகார் கூறிய சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை கொச்சி துணை கமிஷனரிடம் ஆன்லைன் மூலமாக அளித்த நிலையில், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எர்ணாகுளம் போலீஸ் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, எர்ணாகுளம் போலீஸ் பாடகி சுசித்ராவை விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments