என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்.. 'காதல்' சுகுமார் மீது திருமணமான நடிகை புகார்..!

  • IndiaGlitz, [Friday,January 10 2025]

ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை இருக்கும் நடிகை ஒருவர் தன்னை ‘காதல்’ சுகுமார் காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரத் நடித்த 'காதல்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சுகுமார். காமெடி நடிகரான சுகுமார் மீது நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ‘காதல்’ படத்தில் நடித்த துணை நடிகர் சுகுமாருக்கும் எனக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் காதலித்தோம். என்னிடமிருந்து நகையும் பணமும் சுகுமார் வாங்கி வந்துள்ளார்.

சமீப காலமாக என்னுடைய தொடர்பை சுகுமார் தவிர்த்து வந்தார். என்னுடைய செல்போனையும் முடக்கி உள்ளார், என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சுகுமாரிடம் கேட்ட போது, தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகுமார் தனக்கு திருமணமானதை மறைத்து என்னிடம் பொய்யாக பழகியதுடன் பண மோசடி செய்துள்ளார் என்று கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை': சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்..!

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

அஜித்தின் அடுத்த படம் நீண்ட கால தாமதம் ஆகுமா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

அஜித் தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், அவருடைய அடுத்த படம் சில மாதங்கள் காலதாமதம் ஆகும் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை .

விஷால் உடல் நலம் குறித்த வதந்தி - விஷால் தரப்பு விளக்கம்

கடந்த சில நாட்களாக நடிகரும், தயாரிப்பாளரும் மக்கள் மீது  அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளருமான எங்கள் தலைவர் திரு.விஷால் அவர்களின் உடல் நிலை குறித்து

இங்கே பேயும் நெசம்.. சாவும் நெசம்.. : ஜிவி பிரகாஷின் 'கிங்ஸ்டன்' டீசர்..

ஜிவி பிரகாஷ் நடித்த 'கிங்ஸ்டன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக

அஜித்தின் 'விடாமுயற்சி'படத்தின் சென்சார், ரன்னிங் டைம் தகவல்.. ரிலீஸ் எப்போது?

அஜித் நடித்த 'விடாமுயற்சி'படத்தின் திரைப்படத்தின் சென்சார்  மற்றும் ரன்னிங் டைம் தகவல் வெளியாகி உள்ளது. அதை அடுத்து இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக உள்ளது.