கணவர் மீது நடிகை கொடுத்த குடும்ப வன்முறை புகார்: சீரியல் நடிகர் கைது!

  • IndiaGlitz, [Wednesday,July 14 2021]

பிரபல நடிகை ஒருவர் தனது கணவர் மீது குடும்ப வன்முறை புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’விஸ்வதுளசி’. இந்த திரைப்படத்தில் மம்முட்டி, நந்திதாதாஸ், மனோஜ் கே ஜெயன் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் இளவயது நந்திதா தாஸ் கேரக்டரில் நடித்தவர் நடிகை அம்பலிதேவி. இவரும் சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அம்புலி தேவிக்கும், ஆதித்யன் ஜெயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொல்லம் காவல் நிலையத்தில் திடீரென தனது கணவர் ஆதித்தியன் ஜெயன் மீது நடிகை அம்பலிதேவி குடும்ப வன்முறை பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஆதித்தியன் ஜெயனை போலீசார் கைது செய்து அதன் பின்னர் ஜாமினில் விடுதலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்பி!

தளபதி விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று தள்ளுபடி செய்த நீதிமன்றம்,

சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு எப்போது?

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு

எது பேசினாலும் தப்பாகுது: 'வலிமை' போஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்த சாந்தனு புலம்பல்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் மோஷன் போஸ்டர் 10

விஜய் உண்மையான ஹீரோ தான்: ஆதரவு தெரிவித்த பாஜக நடிகை

தளபதி விஜய்யின் கார் வரி குறித்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த போது நீதிபதி 'சினிமா ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று கருத்து

மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்கிறேன்: முதலமைச்சரை சந்தித்தபின் வடிவேலு பேட்டி!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த வடிவேலு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்து அதிமுக ஆட்சிக்கு