ரூ.6 கோடி கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் புகார்.. அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை தன்னிடம் ஆறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ள நிலையில் அவர் மீது நடிகை அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்த திகங்கனா சூர்யவன்ஷி என்பவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'ஷோ ஸ்டாப்பர்' என்ற வெப் தொடரில் இவர் நடித்துள்ள நிலையில் இந்த வெப் தொடரில் பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த வெப்தொடரை மணிஷ் ஹரிசங்கர் என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்த வெப் தொடரை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் அக்சயகுமார் இடம் தான் பேசுவதாகவும் அதற்காக அக்ஷய் குமாருக்கு 6 கோடியும் தனக்கு 75 லட்சம் வேண்டும் என்று திகங்கனா தயாரிப்பாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை தயாரிப்பாளர் , இயக்குனர் மணிஷ் ஹரிசங்கர் கூறிய நிலையில் அவர் மீது திகங்கனா அவதூறு வழக்கு பதிவு செய்ய உள்ளார் . இது குறித்து காவல் துறையில் அவர் 11 பிரிவுகளின் மணிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து திகங்கனா மேலும் கூறிய போது ’தான் பணம் கேட்டு மிரட்டியதாக மணிஷ் கூறிய அனைத்தும் பொய் என்றும் வெப் தொடர் உருவாகி இரண்டு வருடம் ஆகியும் விற்பனை ஆகவில்லை என்பதால் விளம்பரத்திற்காக தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் இதைப் பற்றி விளக்கம் அளித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments