நீண்ட பிரம்மச்சாரியத்திற்கு பின் திருமணத்திற்கு தயாராகும் ரஜினி-கமல் நாயகி
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோர்களின் நெருங்கிய உறவினரும், ரஜினி, கமல் உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா விரைவில் தனது குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்த 'எனக்குள் ஒருவன்', 'ரஜினிகாந்த் நடித்த 'தளபதி', உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்த ஷோபனா, ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் ஆவார். சென்னையில் நாட்டிய பள்ளி நடத்தி வரும் ஷோபனா, 47வயதாகியும் திருமணம் செய்யாமல் இதுவரை திருமணமே செய்யாமல் பரதக்கலைக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்து வந்தார். மேலும் அவர் அனந்தநாராயிணி என்பவரை மகளாக கடந்த 2001ஆம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் மிக விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments