சித்ரா தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்: தூக்கில் தொங்கும் முன் யாரிடம் பேசினார்?

  • IndiaGlitz, [Sunday,December 13 2020]

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளதால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது 5வது நாளாக அவரது கணவர் ஹேமந்த் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

மேலும் சித்ரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படப்பிடிப்பை முடித்துவிட்டு தங்கும் அறைக்கு வந்த சித்ரா தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு குளித்து விட்டு அதன்பிறகு நைட்டியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது

மேலும் தூக்கில் தொங்குவதற்கு முன்னதாக தனது தாயாரிடம் பேசியதாகவும் தாயாருடன் அவர் பேசியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது ஹேமந்தை சித்ரா திருமணம் செய்து கொள்ள சித்ராவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனையடுத்தே சித்ரா பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் இதுகுறித்துதான் சித்ராவும் அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது

ஹேமந்தையும் விட்டு கொடுக்க முடியாமல் தாயாரையும் சமாதானப்படுத்த முடியாமல் மன உளைச்சலில் அவர் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து சித்ரா தாயாரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ விரைவில் விசாரணை செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது