நடிகை 'நல்லெண்ணெய்' சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் ‘நல்லெண்ணெய்’ விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு ‘நல்லெண்ணெய்’ சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’சேரன் பாண்டியன்’ ’ஊர்காவலன்’ ’என் தங்கச்சி படிச்சவ’ ’வெள்ளையத்தேவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த சித்ரா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். சித்ராவின் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகிய நிலையில் சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்துவருகின்றனர்.
தற்போது நடிகை சித்ரா தற்போது சென்னை சாலிகிராமத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com