த்ரிஷாவின் கடைசி பேச்சுலர் பிறந்த நாள் இதுதான்: பிரபல நடிகை தகவல்!
- IndiaGlitz, [Thursday,May 06 2021]
தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக கைவசம் அதிக படங்களை வைத்துள்ளார் என்பதும் அதில் ஒன்று மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் நடந்து விடும் என்று திரையுலக வட்டாரங்களால் கூறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் த்ரிஷா தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் என்பதும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவரும் நடிகையுமான சார்மி த்ரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு த்ரிஷா பேச்சிலராக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த ஆண்டுக்குள் த்ரிஷாவுக்கு திருமணம் ஆகி விடுமா என்றும், அடுத்த பிறந்தநாளை த்ரிஷா தனது கணவருடன் கொண்டாடுவாரா? என்றும் கேட்டு வருகின்றனர். த்ரிஷாவின் திருமணம் இந்த ஆண்டு நடக்குமா என்பதையும் அடுத்த ஆண்டு அவர் தனது கணவருடன் பிறந்தநாளை கொண்டாடுவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்