முன்னாள் முதலமைச்சருக்கு சிறை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறை தண்டனை என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் பிரபல நடிகை தனது வீட்டின் முன் பட்டாசு வெடித்து கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்து அவரை செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை என்ற தகவல் வெளியானதும் நடிகையும் ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா தனது வீட்டின் முன் தனது கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினார். இதுகுறித்த ஒரு வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
తనజోలికి ఇన్నాళ్లూ ఏ వ్యవస్థా రాలేదని విర్రవీగిన @ncbn కు ఈ కోర్ట్ తీర్పు తగిన గుణపాఠం. ఎవరూ న్యాయానికి, కోర్టులకు అతీతం కాదని సమాజానికి తెలియాలి. చంద్రబాబు చేసిన పాపానికి తగిన ఫలితం అనుభవించాలి.#CorruptBabuNaidu#SkilledCriminalCBNInJail pic.twitter.com/q7g8aeUDuy
— Roja Selvamani (@RojaSelvamaniRK) September 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments