பீச்சில் கேஷுவல் லுக்… ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை கேத்ரின் தெரசா!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்“ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. சூப்பர் ஹிட் அடித்த இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து “அருவம்“ திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் “கதகளி“, “கடம்பன்“, கலகலப்பு2“, “கணிதன்“ போன்ற படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார்.
தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை கேத்ரின் தெரசா கடற்கரையில் கேஷுவல் உடையணிந்து எடுத்துள்ள போட்டோஷுட் புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் இதுவரை கிளாமர் லுக்கில் நடிகை கேத்ரின் தெரசாவை பார்த்திராத ரசிகர்கள் சிலர் “செம க்யூட்“ என்று கமெண்ட் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை கேத்ரின் தெரசா தற்போது தமிழில் “கான்“ என்ற ஒரு படத்தை மட்டுமே கைவசம் வைத்துள்ளார். ஆனால் தெலுங்கில் 3 திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments