53வது மாடி.. 5384 சதுர அடி.. ரூ.48 கோடியில் அபார்ட்மெண்ட் வீடு வாங்கிய நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
53வது மாடியில் 5384 சதுர அடியில் ரூபாய் 48 கோடிக்கு பிரபல நடிகை ஒருவர் அபார்ட்மெண்ட் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் கடந்த 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மாதுரி தீட்சித். இவர் மும்பையின் முக்கிய இடத்தில் 53வது மாடியில் அபார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த வீட்டை வாங்குவதற்கான பாத்திரத்தில் அவர் கையெழுத்திட்டார் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு பெண் வீடு வாங்குவதாக இருந்தால் முத்திரைத்தாள் வரியில் ஒரு சதவீதம் வரை சலுகை வழங்கப்படும் என்பதால் அவருக்கு ஒரு சதவீதம் வரிச்சலுகை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு மும்பையின் வோர்ரி என்ற பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அபார்ட்மென்டில் தான் மாதுரி தீட்சித் ஒரு வீடு வாங்கியுள்ளார். இந்த அப்பார்ட்மெண்டில் கால்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், ஸ்பா உள்பட பல்வேறு வசதிகள் இருப்பதாகவும், மாதுரி தீட்சித் வாங்கியுள்ள 53 வது மாடியிலிருந்து பார்த்தால் அரபிக்கடலின் அழகும் ஒட்டுமொத்த மும்பையும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments