என் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது எனக்கு தெரியாது: நடிகையின் சகோதரர் அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,July 01 2022]
பிரபல நடிகையின் சகோதரர் தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது தனக்கு தெரியாது என்றும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் ’ரட்சகன்’ ’முதல்வன்’ உள்ளிட்ட சில படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் பிரபல நடிகை சுஷ்மிதாசென். முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகியான இவரது நடிப்பில் உருவான ’ஆர்யா’ என்ற வெப்தொடரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவ் என்பவருக்கும் சாரு என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திடீரென இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து ராஜீவ் கூறியபோது தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாகவும் அது பற்றி தனக்கு தெரியாது என்றும் அந்த விஷயத்தை தன்னிடம் மறைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி சாரு இதுகுறித்து கூறிய போது ’ஏற்கனவே எனக்கு திருமணம் நடந்தது குறித்து அவருக்கு தெரியும் என்றும் நான் என்னுடைய பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்ததற்கு பாராட்டு தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார். இது குறித்த செய்திகள் வட இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.