இன்று ஒரே நாளில் விஜய் - கவின் பிறந்த நாள்.. இருவருடனும் அடுத்தடுத்து நடித்த நடிகையின் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மற்றும் கவின் ஆகிய இரண்டு நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த நடிகை இன்று இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜூன் 22ஆம் தேதி ஆன இன்று தளபதி விஜய்க்கு மட்டுமின்றி நடிகர் கவினுக்கும் பிறந்தநாள் என்பதும் இதனை அடுத்து இருவருக்கும் அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்யுடன் நடிகை அபர்னா தாஸ் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்த நிலையில், கவின் நடித்த ’டாடா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்த நிலையில் விஜய் மற்றும் கவின் உடன் நடித்த அபர்ணா தாஸ் அடுத்தடுத்து இருவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அவர்களே! உங்கள் அன்பு என்றும் எங்களுக்கு இருக்கும். உங்களுடன் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன், கடவுள் உங்களுக்கு ஆசிர்வதிப்பார்’ ன்று விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ’நீங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்பதை பார்ப்பதற்கு பெருமையாகவும் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல போகிறீர்கள் என்பதை பார்ப்பதற்கு உற்சாகமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள், எப்போதும் இப்படியே இருங்கள் என கவினுக்கும் தனது வாழ்த்துக்களை அபர்ணா தாஸ் தெரிவித்துள்ளார்.
Happy birthday vijay sir ♥️♥️
— Aparna Das (@aparnaDasss) June 22, 2023
Love you always. Proud to have known and worked with you🥺 god bless 🤗@actorvijay pic.twitter.com/Ab0QtTT2NP
Happy birthday to you kavin ♥️
— Aparna Das (@aparnaDasss) June 22, 2023
Proud to see how far you have come and excited to see how far you are gonna go :) best wishes for everything. Always stay the same ♥️👫 @Kavin_m_0431 pic.twitter.com/A8gBLKaAW5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com