இதயத்தில் 2 ஓட்டை.. 3 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை.. விஜய் பட நடிகையின் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ’சச்சின்’ என்ற ஒரே தமிழ் படத்தில் நடித்து பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை பிபாஷா பாசுவின் குழந்தையின் இதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் அவரது குடும்பமே அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நடித்த ’சச்சின்’ திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த இந்த பிபாஷா பாசு, அதன்பின் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கரண்சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் தேவி என்று பெயரிட்டார்.
இந்த நிலையில் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நல குறைவாக இருந்த நிலையில் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தபோது தான் அவரது மகளுக்கு இதயத்தில் இரண்டு ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து எந்த தாய்க்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று பிபாஷா பாசு உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தி உள்ளதாகவும் மருத்துவரின் உதவியால் தனது மகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com