14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிந்துமாதவி: ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான பிந்துமாதவி தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
பிந்து மாதவி குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த அபார்ட்மெண்ட் முழுவதையும் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பார்ட்மெண்ட் கேட்டையும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி விட்டதாகவும், 14 நாட்கள் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்ற அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 14 நாட்கள் தனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் பிந்து மாதவி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ’கழுகு 2’ படத்தில் நடித்த நடிகை பிந்துமாதவி தற்போது ’மாயன்’ மற்றும் ’யாருக்கும் அஞ்சேல்’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
One of the resident in my apartment is tested covid positive and so it’s self isolation for all of us in the building for the next 14 days.... #redzone pic.twitter.com/l1MaTP7UDm
— bindu madhavi (@thebindumadhavi) May 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments