14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிந்துமாதவி: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,May 31 2020]

பிரபல தமிழ் நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான பிந்துமாதவி தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

பிந்து மாதவி குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த அபார்ட்மெண்ட் முழுவதையும் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பார்ட்மெண்ட் கேட்டையும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி விட்டதாகவும், 14 நாட்கள் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்ற அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 14 நாட்கள் தனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் பிந்து மாதவி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு ’கழுகு 2’ படத்தில் நடித்த நடிகை பிந்துமாதவி தற்போது ’மாயன்’ மற்றும் ’யாருக்கும் அஞ்சேல்’ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தமிழக முதல்வருக்கு பாரதிராஜா எழுதிய முக்கிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சின்னத்திரை படப்பிடிப்புக்கு நேற்று அனுமதி அளித்தார் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம். மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்கள்

திருமணத்திற்கு 50, துக்கத்திற்கு 20, படப்பிடிப்புக்கு மட்டும் 60ஆ? கஸ்தூரி கேள்வி

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள், 600க்கும் மேற்பட்டவர்கள் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது

14 வயதில் நடந்த அந்த சம்பவம்: நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த ஷ்ராதா ஸ்ரீநாத்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷ்ராதா ஸ்ரீநாத்.

போக்குவரத்து தொடக்கம், இ-பாஸ் தேவையில்லை: தமிழக அரசின் தளர்வுகள் அறிவிப்பு

ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படும் நிலையில் இந்த ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தளர்வுகள் குறித்து மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

கொரோனாவால் குஷ்புவின் உறவினர் மரணம்: அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவை