திடீரென துறவறம் பூண்ட 'பாய்ஸ்' பட நடிகை.. தினமும் 300 பேருக்கு அன்னதானம் என அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2024]

ஷங்கர் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகை திடீரென துறவறம் பூண்டதாகவும், தினசரி 300 பேருக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு ’கந்தா கடம்பா கதிர்வேலா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் புவனேஸ்வரி. அதன் பிறகு அவர் ’பிரியமானவளே’, ’பட்ஜெட் பத்மநாதன்’, ’ரிஷி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் ’பாய்ஸ்’ படத்தில் விலைமாதுவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் திடீரென விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை ஆனார். விடுதலையின் பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்த புவனேஸ்வரி, தற்போது ஆன்மீக வாழ்க்கை மேற்கொண்டு துறவறம் பூண்டு கோவில்களுக்கு சென்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அவர் கூறியதாவது: குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு வந்து நடிக்க தொடங்கினேன். ஆனால் கவர்ச்சி வேடங்கள் மட்டுமே கிடைத்து. இருப்பினும் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயம் திடீரென ஒரு சிக்கலில் சிக்கினேன். ஆனாலும் நான் போராடி, நிரபராதி என நிரூபித்தேன். இருப்பினும் சமூகம் என்னை தவறாகவே பார்த்தது.

தற்போது எனக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகி விட்டது. என் மீதி காலத்தை இறை பணிக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். காசிக்கு சென்று சித்தி பெற்று விட்டேன். கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கு சென்று, தினமும் 300 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறேன்.

சென்னையில் எனக்கு சொந்தமாக சில வீடுகள் உள்ளன. அவற்றை படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விடுகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் என் தேவைக்கு போக மீதத்தை அன்னதானத்திற்கும் கோவில்களுக்கும் செலவழிக்கிறேன்,* என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பண்டரிபாய், காஞ்சனா போன்றோர் துறவறம் எடுத்தது போன்றே, தற்போது புவனேஸ்வரியும் துறவறம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

25 ஆண்டுகால சின்னத்திரை நடிகர்.. புற்றுநோயால் இறந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சின்னத்திரையில் 25 ஆண்டு காலமாக நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் புற்றுநோய் காரணமாக காலமானதை தொடர்ந்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இளமை பருவத்திற்கு திரும்பிய தனுஷ்.. நயன்தாராவுக்கு வீடியோவை டேக் செய்த நெட்டிசன்கள்..!

தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் தற்போது இளமை பருவத்திற்கு திரும்பியதை போல கெட்டப்பில் உள்ளனர். இது குறித்த வீடியோக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு, நயன்தாராவுக்கு டேக் செய்து வருவது பரபரப்பை

சௌந்தர்யாவை பொளந்து விடுங்க சார்.. விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா பாடி லாங்குவேஜ் உடன் கத்தும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் எரிச்சல் அடைந்த பார்வையாளர்கள் 'சௌந்தர்யாவை

பவர் ஸ்டார் பவன் கல்யாணின்'ஹரி ஹர வீர மல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்':  இறுதிக்கட்ட படப்பிடிப்பு..

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான 'ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1:  ஸ்வார்ட் vs ஸ்பிரிட்' மூலம் சரித்திரம் படைக்க உள்ளார்.

மயிலுக்கு போர்வை போர்த்திய வள்ளல் பேகனின் வரலாறு!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் நெல்லை சுப்பையா அவர்கள், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பேகனின் கதையை விவரித்துள்ளார்.