'ஜில்லுன்னு ஒரு காதல்' பூமிகாவா இவர்? கணவர், குழந்தையுடன் அசத்தல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,March 24 2023]

சூர்யா நடித்த ’ஜில்லுனு ஒரு காதல்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகாவின் கணவர் மற்றும் மகனின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ’பத்ரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகை ஆக அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதன் பிறகு ’ரோஜா கூட்டம்’ ’ஜில்லுனு ஒரு காதல்’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் பல ஹிந்தி தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’சீதாராமன்’ ’கண்ணை நம்பாதே’ ஆகிய திரைப்படங்களில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான யோகா ஆசிரியர் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2014 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூமிகாவுக்கு இன்ஸ்டாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கல் உள்ளனர் என்பதும் அவரது இன்ஸாகிராமில் தனது கணவர் மற்றும் மகனின் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்துவரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது,.