'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் பார்த்த மாதிரி இருக்காரே.. பூமிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

சூர்யா நடித்த ’சில்லுன்னு ஒரு காதல்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை பூமிகா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது

விஜய் நடித்த ’பத்ரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூமிகா ’ரோஜா கூட்டம்’ ’சில்லுன்னு ஒரு காதல்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ’சீதாராமம்’, இந்த ஆண்டு வெளியான ‘கண்ணை நம்பாதே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான யோகா ஆசிரியர் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பூமிகாவுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா, இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார். இந்த நிலையில் பூமிகா தனது 45 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய நண்பர்கள் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பூமிகா பகிர்ந்துள்ள நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் பூமிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ’சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் பார்த்த மாதிரியே இன்னும் பூமிகா இருக்கிறார் என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.