நடிகை பாவனாவின் திருமண தேதி எது தெரியுமா?
- IndiaGlitz, [Monday,December 18 2017]
தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவானாவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அவருடைய திருமண தேதி குறித்த வதந்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பாவனாவின் திருமண தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நடிகை பாவனாவுக்கும், பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் டிசம்பர் 22ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் எளிமையாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் திருமண தினத்தில் அதிக ஆடம்பர உடையின்றி எளிமையான உடையில் குறைந்த அளவில் நகையுடன் மணப்பெண்ணாக தோற்றமளிக்கப்போவதாக பாவனா தெரிவித்துள்ளார்
மேலும் திருமணத்திற்கு பின்னரும் நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பை தொடரவுள்ளதாகவும், தான் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது குறித்து தன்னுடைய வருடங்கால கணவர் குடும்பத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார். எனவே பாவனாவை திருமணத்திற்கு பின்னரும் திரையில் காணலாம் என்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல்