வொர்க் அவுட்டிற்கு இடையே நடனம்… மாஸான வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

தமிழ், மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை பாவனா. இவர் தமிழில் “சித்திரம் பேசுதடி“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து “ஜெயம் கொண்டான்“, “தீபாவளி“, “வெயில்“ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பாவனா தொடர்ந்து திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தத் திரைப்படமான “96“ படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகை த்ரிஷா கதாபாத்திரத்தில் இவர் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது கன்னடத்தில் “கோவிந்தா கோவிந்தா“ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை பாவனா தொடர்ந்து வொர்க் அவுட் விஷயங்களில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதையடுத்து ஜிம்மிற்கு சென்ற நடிகை பாவனா கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமல் நடனம் ஆடிக்கோண்டே வொர்க் அவுட் செய்திருக்கும் வீடியோவை தனது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் பாராட்டை பெற்றுவருகிறது.