பாவனாவை கடத்தியது ஏன்? சுனில்குமாரின் அதிர்ச்சி வாக்குமூலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நான்குபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியும், பாவனாவின் முன்னாள் டிரைவருமான சுனில்குமார் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்நிலையில் சுனில்குமாரிடம் கேரள போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இந்த வாக்குமூலத்தில் சுனில்குமார் கூறியதாவது:
“எனது காதலியை திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ நினைத்தேன். அதற்கு பணம் தேவைப்பட்டது. பாவனாவிடம் ஏற்கெனவே ஓட்டுநராக இருந்ததால் அவரிடம் பணம் உள்ள விவரம் தெரியும். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை செல்போனில் பதிவு செய்து மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிக்கலாம் என நினைத்தேன்” என்று போலீஸ் விசாரணையின்போது சுனில்குமார் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய செல்போனை சாக்கடையில் எறிந்து விட்டதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்ததை அடுத்து போலீசார் அவரை அழைத்துக் கொண்டு, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சாக்கடைகளில் செல்போனை தேடினர். ஆனால் செல்போன் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் சுனில்குமாரின் காதலிக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரையும் விரைவில் போலிசார் விசாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com