கொரோனாவால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்ட பிரபல நடிகை

இந்தியா உள்பட உலகமெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் எதிர்பாராத பல விளைவுகளை கொண்டு வந்து விட்டது. இதுவரை மனிதர்கள் சந்திக்காத பல நிகழ்வுகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் காமெடி நடிகை ஒருவர் 2020 ஆம் ஆண்டில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அந்த முடிவை தள்ளி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் காமெடி நடிகை பார்திசிங் என்பவர் ஹர்ஷ் லிம்பச்சியா என்ற எழுத்தாளரை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடம் கழித்து அதாவது 2020 ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்த தம்பதிகள் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக மேலும் ஓரிரு ஆண்டுகள் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்க இந்த தம்பதிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து நடிகை பார்திசிங் கூறியபோது, ‘தங்களது குழந்தை பூமியில் பிறக்கும் போது அமைதியான சூழ்நிலை இருக்க வேண்டும் என்றும் இப்போது குழந்தை பெற்றால் அது அந்த குழந்தையின் உயிரோடு விளையாடுவதற்கு சமம் என்றும் அந்த ரிஸ்க்கை நாங்கள் எடுக்க விரும்பவில்லை என்றும் நடிகர் பார்தி சிங் கூறியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் கர்ப்பமான பெண்கள் மருத்துவமனைக்கும் சென்று வருவது என்பது ஒரு சவாலான காரியம் என்றும் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்வதை நினைத்தாலே மனதில் பயம் ஏற்படுவதாகவும், எனவே ஓரிரு வருடங்கள் கழித்து கொரோனா பரபரப்பு முடிந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் நடிகை பார்திசிங் கூறியுள்ளார்.