கல்லூரி பேராசிரியரை சரமாரியாக கன்னத்தில் அடித்த நடிகை

  • IndiaGlitz, [Saturday,July 07 2018]

கல்லூரி பேராசிரியர் ஒருவரை தொலைக்காட்சி நடிகை ஒருவர் சரமாரியாக கன்னத்தில் அடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகையை கல்லூரி பேராசிரியர் தனது செல்போனில் ஆபாசமான கோணங்களில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது

ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த விமானத்தில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த விஜய் பிரகாஷ் என்ற கல்லூரி பேராசிரியர் அந்த நடிகையை தனது செல்போனில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது.

இதனையறிந்த தொலைக்காட்சி நடிகை அந்த புகைப்படங்களை டெலிட் செய்யுமாறு கூறினார். ஆனால் பேராசிரியர் விஜய்பிரகாஷ், தான் அந்த நடிகையை புகைப்படம் எடுக்கவில்லை என்று மறுத்தார். இந்த நிலையில் திடீரென நடிகை, பேராசிரியரின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்து புகைப்படங்களை நீக்குமாறு கூறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நடிகையுடன் வந்திருந்த துணை நடிகர் ஒருவர் விமானம் தரை இறங்கியவுடன் இதுகுறித்து விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் பேராசிரியரின் செல்போனை சோதனை செய்தபோது ஆபாச கோணங்கள் உள்பட பல்வேறு கோணங்களில் நடிகையை புகைப்படம் எடுத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் பேராசிரியரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் இதேபோன்று வேறு குற்றங்கள் செய்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.