இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை: பாலியல் வழக்கு குறித்து நடிகையின் பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் ’இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை’ என தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படப்பிடிப்பு முடித்து விட்டு நடிகை ஒருவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை கடத்தியதாகவும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் ஜாமீனில் வெளி வந்தாலும் இந்த வழக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன் மீதான பாலியல் தாக்குதல் வழக்கு குறித்து அந்த நடிகை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனம் திறந்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இது எளிதான பயணம் அல்ல, ஐந்து வருடங்களாக என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலில் எனது பெயர், அடையாளம் நசுக்கப்பட்டு விட்டன. குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்த, அமைதியாக, தனிமைப்படுத்த பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அதே சமயம் என் குரலை உயிர்ப்பிக்க சிலர் முன்வந்தனர். எனக்காக ஒலிக்கும் குரலை நான் கேட்கும் போது இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை என்பதை உணர்ந்தேன். எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி’ என அந்த நடிகை கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments