பெண்களுக்கு எதற்கு திருமணம்? சர்ச்சை பதிவுக்கு விளக்கமளித்த விவாகரத்து பெற்ற நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்களுக்கு திருமணம் எதற்கு என சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த விவாகரத்தான நடிகை ஒருவர் இன்று அந்த பதிவுக்கு மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை பாமா என்பவர் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’எல்லாம் அவன் செயல்’ ’சேவற்கொடி’ ‘மதகத ராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாமா திருமணம் செய்த நிலையில் அடுத்த ஆண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பின்னர் கணவரை விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. 35 வயதாகும் பாமா, திருமணம் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகு திரையுலகில் இருந்து விலகி உள்ள நிலையில் நேற்று அவரது இன்ஸ்டா பதிவு சர்ச்சைக்கு உள்ளானது.
அதில் பெண்களுக்கு எதற்கு திருமணம்? திருமணம் செய்ய வேண்டாம், யாரும் பணம் கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம், உங்களை திருமணம் செய்தவர் உங்களை கைவிட்டு விட்டால் என்ன செய்வது? பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி போய்விட்டால் என்ன செய்வது? எனவே பெண்கள் ஒருபோதும் அப்படியான சூழ்நிலையில் திருமணம் செய்ய வேண்டாம், யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை யூகிக்க முடியாது, நம்மை சாவின் விளிம்பில் கூட அது கொண்டு செல்ல வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் ’பெண்கள் திருமணமே செய்ய கூடாதா? அப்படி என்றால் எப்படி இந்த உலகம் இயங்கும்? என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு நடிகை பாமா இன்று விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’நான் வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தான் கூறினேன், அப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று தான் விளக்கி இருந்தேன், அதற்காக பெண்கள் யாருமே திருமணம் செய்யக்கூடாது என்று நான் கூறவில்லை, நான் கூறியதை சரியாக புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை பாமாவின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout