பிரபல தமிழ் நடிகையின் சகோதரர் சென்னையில் கைது!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2019]

தமிழ் திரைப்பட கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உன்னை கொடு என்னை தருவேன், என் புருஷன் குழந்தை, தை பொறந்தாச்சு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் பாபிலோனா. அவரது கவர்ச்சிக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் இவரது தம்பி விக்கி என்ற விக்னேஷ் குமார் குடிபோதையில் நேற்று விருகம்பாக்கம் அருகே ஒருவரிடம் தவறு செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விக்கியிடம் இது குறித்து விசாரித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த விக்கி போலீசை அடித்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து வந்து போலீசை அடித்த விக்கியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.