மார்பக புற்றுநோயோடு மற்றொரு நோய்.. பரிதாபமான நிலையில் பிரபல நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஒருவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கீமோதெரபி காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு மற்றொரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நிலையில் அவருடைய பரிதாப நிலைக்கு ரசிகர்கள் வருந்தியதோடு விரைவில் அவர் குணமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் என்பவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார். தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மார்பக புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றும் இந்த நோயிலிருந்து நான் எப்படியும் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மார்பக புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் அந்த சிகிச்சையின் பக்க விளைவு காரணமாக தற்போது அவருக்கு மியூகோசிடிஸ் என்றும் நோய் தாக்கி உள்ளதாகவும் இதற்காக மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உங்களில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் நீங்கள் எந்த விதமான சிகிச்சை எடுத்தீர்கள் என்று கூறினால் எனக்கு நன்றாக இருக்கும் என்றும் என்னால் சாப்பிட கூட முடியவில்லை, மிகவும் வலி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments