யாரும் நம்பாதீங்க, இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: நடிகை அதுல்யா ரவி
Send us your feedback to audioarticles@vaarta.com
’காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’கதாநாயகன்’ ’ஏமாளி’ ’சுட்டு பிடிக்க உத்தரவு’ ’நாடோடிகள் 2’ உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அதுல்யா ரவி. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரில் போலி பேஸ்புக் பக்கங்கள் ஆரம்பித்து ஒருசில அறிவிப்புகளை மர்ம நபர்கள் வெளியிட்டு உள்ளதாகவும் அது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் குறிப்பிட்டுள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மர்மநபர் ஒருவர் எனது பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் திரையுலக பிரபலங்களுக்கு நான் அனுப்புவது போல சில செய்திகளை அனுப்பி உள்ளார். இது குறித்து எனது கவனத்திற்கு வந்தவுடன் நான் புகார் அளித்துள்ளேன். நான் பேஸ்புக்கில் இல்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
இதற்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் சிபிராஜ் உள்பட ஒருசில திரையுலக பிரபலங்களின் பெயர்களில் போலி பக்கங்கள் ஆரம்பித்து அவர்களது திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாக போலியான விளம்பரங்களும் வந்தது என்பதும் அதன் பின் அவர்களின் கவனத்திற்கு வந்தவுடன் மறுப்பு தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது
அதேபோல தற்போது அதுல்யா ரவியும் தனது பெயரில் உள்ளது போலி பேஸ்புக் பக்கம் என்றும், அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் யாரும் அதில் உள்ள தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அந்த தகவல்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
I m not sure why someone created a fake ID in Facebook and messaging to the people I know personally as well as in film industry!This is bullshit !Already reported it !And I wanted to inform you guys that I m not in Facebook officially! https://t.co/k7kX0WD6Qn
— Athulyaa Ravi (@AthulyaOfficial) April 23, 2021
Kindly report it pic.twitter.com/nnLWStTruP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments