யாரையும் நம்பாதீங்க: இளம்பெண்களுக்கு நடிகை அதுல்யா அட்வைஸ்

  • IndiaGlitz, [Wednesday,March 13 2019]

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே தங்களது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்துள்ள நிலையில் நடிகை அதுல்யா இதுகுறித்து கூறியதாவது

எல்லாருக்கும் வணக்கம். பொள்ளாச்சி விஷயம் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அவங்கள பத்தி நாம பேசிட்டு இருக்கோம். இந்த மாதிரி தெருபொறுக்கி நாய்ங்க பண்ற விஷயத்துனால எவ்வளவோ நல்ல பசங்களையும் ரொம்ப ஜாக்கிரதையா பார்க்க வேண்டிய நிலைமையில நாம இருக்கோம்

மத்த நாட்டில நடந்தா இவனுக்கு எல்லாம் எவ்ளோ தீவிரமான தண்டனை குடுப்பாங்களோ, அதை இவனுங்களுக்கு குடுத்தாதான், அடுத்து இவங்கள மாதிரி பண்றவங்களும் பயப்படுவாங்க. இல்லே.. அப்படி ஒரு நியூஸே வரலேன்னா இன்னும் இந்த மாதிரி சைக்கோங்க எல்லாம் நிறைய விஷயத்தை பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.

தயவு செய்து உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. இந்த மாதிரி சென்சிபிள் ஆன விஷயத்தை பாலிட்டிக்ஸ்-ஆ ஆக்கிடாதீங்க. அதேமாதிரி ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வேண்டுகோள், பெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க

இளம்பெண்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்க பழகுன பையனா இருந்தாலும் லவ் பண்ற பையனா இருந்தாலும் கொஞ்ச நாளைக்கு முழுசா நம்ப வேண்டாம். தனியா சந்திக்கவும் வேண்டாம், டிராவல் செய்யவும் வேண்டாம். அந்த பையன் நல்லவனாகவே இருக்கட்டும். இருந்தாலும் ஒரு வருஷத்துக்கு பொது இடங்கள்ல்ல மட்டுமே மீட் செய்யுங்க. பீச், பார்க், ரெஸ்டாரெண்ட் போன்ற இடங்கள்ல்ல மீட் செஞ்சிட்டு அந்த பையன நல்ல புரிஞ்சுக்கோங்க.

பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாருமே நம்பித்தான் போய் கெட்டிங்க. ஆனால் இனிமேல் இந்த தப்பை செய்யாதீங்க. அதேபோல் இனிமேலும் பதுங்கி இருக்காம, வெளியில வந்து உண்மையை சொல்லுங்க. பதட்டப்பட வேண்டாம். இப்போ பதட்டப்பட போறது அந்த குற்றவாளிங்க தான். தைரியமா வெளியில வந்து கம்ப்ளைண்ட் பண்ணுங்க. இவ்வாறு நடிகை அதுல்யா கூறியுள்ளார்.