காதலில் விழுந்தது எப்படி? சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் திருமணமான தமிழ் நடிகை ஒருவர் தனது காதல் தொடங்கியது எப்படி என்பது குறித்து பேட்டியளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த ’மனம் கொத்தி பறவை’ விஜய் சேதுபதி நடித்த மலையாள திரைப்படமான ’மார்கோனி மாத்தாய்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ஆத்மியா. இவருக்கும் சனூப் என்பவருக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது திருமணத்திற்கு பின்னர் ஆத்மியா இது ஒரு காதல் திருமணம் என்றும் நானும் சனூப்பும் ஒரே கல்லூரியில் படித்தோம் என்று கூறியுள்ளார். கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை ஒருவர் நாங்கள் சந்தித்துக் கொள்ளவில்லை என்றாலும் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம் என்றும் அப்போது முதல் அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
அதன் பின்னர் தன்னுடைய முதல் படம் வெளியானபோது சனூப்பிடம் இருந்து மெசேஜ் வந்தது என்றும் அன்று முதல் எங்கள் காதல் தொடங்கியது என்றும், 5 வருடங்களுக்கு பின் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணத்திற்கு பின்னரும் என்னுடைய நடிப்பை தொடர சனூப் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அதனால் தொடர்ந்து இன்னும் சில வருடங்கள் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments