நடிகை அசின் திருமண தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,October 25 2015]

பிரபல நடிகை அசின் பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 26ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டல் ஒன்றில் ராகுல்-அசின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இந்த திருமணத்தில் இருவீட்டார்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நவம்பர் 27ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள West End Greens என்ற பண்ணை வீட்டில் ரிஷப்ஷன் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தில்தான் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் மற்றும் வரவேற்பு முடிந்தபின்னர் அசின், தனது மும்பை நண்பர்களுக்கு மும்பையில் ஒரு ரிஷப்ஷன் ஏற்பாடு செய்திருப்பதாகவும், இதன் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், இருவீட்டார்களும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

'பாகுபலி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமவுலி

ஹாலிவுட் படங்களின் பிரமாண்டங்களை மட்டுமே பார்த்து ரசித்த நமது ரசிகர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுத்ததோடு...

'வேதாளம்' படம் குறித்த முக்கிய தகவல்

அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும்...

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் விஜய்சேதுபதி

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளியான 'நானும் ரெளடிதான்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

'ரஜினிமுருகன்' பிரச்சனை முடிந்ததால் நிம்மதி அடைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்திருந்தார்...

விஜய் ரசிகையாக மாறிய ஷாம்லி

கடந்த 1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ''அஞ்சலி'' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்த பேபி ஷாம்லி...