அசின் மகளா இவர்? எவ்வளவு வளர்ந்துவிட்டார்... ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின் என்பதும், கமல்ஹாசனுடன் ’தசாவதாரம்’ விஜய்யுடன் ’போக்கிரி’ அஜித்துடன் ’ஆழ்வார்’ சூர்யாவுடன் ’கஜினி’ என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை நடிகை அசின் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஆரின் என்ற பெண்குழந்தை 2017ம் ஆண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது அசின் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும் எப்போதாவது தனது மகளின் புகைப்படத்தை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது மகளின் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்
அசின் மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? என அசின் மகள் புகைப்படங்களுக்கு ஏராளாமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments