கமல் பட நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகம்: ரசிகர்கள் வரவேற்பு!

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘பாபநாசம்’ மற்றும் ‘தூங்காவனம்’ ஆகிய தமிழ் படங்களிலும் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஆஷா சரத். மேலும் த்ரிஷயம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஷா சரத் நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் அவரது மகளும் அறிமுகமாகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. துபாயில் எஞ்சினியரிங் படிப்பை முடித்த ஆஷா சரத் மகள் உத்தரா, மனோஜ் கனா இயக்கும் ’கெட்டா’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் ஆஷா சரத் மற்றும் உத்தரா ஆகிய இருவரும் அம்மா மகள் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

’கெட்டா’ இயக்குனர் மனோஜ் ஒருநாள் தற்செயலாக தனது மகளை பார்த்ததாகவும், அப்போது நடிக்க விருப்பமா? என கேட்டபோது தனது மகள் உத்தரா மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டதாகவும் ஆஷா சரத் தெரிவித்துள்ளார். ஆஷா சரத் மகள் சினிமாவில் அறிமுகமாகவிருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து சமூக வலைத்தலங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

இன்று ரஜினி-அமித்ஷா சந்திப்பு நடக்குமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரவிருக்கும் நிலையில் முதல்வர்,

இளைஞர் மீது கார் மோதிய விபத்து: பிக்பாஸ் சினேகனுக்கு வந்த சிக்கல்!

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

ஒரு லைக்குக்கு இத்தனை விசாரணையா? போப் ஆண்டவரைச் சுற்றும் புது சர்ச்சை!!!

சமீபத்தில் பதிவிடப்பட்ட ஒரு பிகினி உடையணிந்த மாடல் புகைப்படத்திற்கு போப் ஆண்டவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து லைக் செய்யப்பட்டதாகப் புது சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது.

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை தர இருக்கும் நிலையில் அவரது முன்னிலையில் ஒரு சில பிரபலங்கள் பாஜகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடனின் மந்திரி சபையில் மேலும் ஒரு இந்தியர்… களைக்கட்டும் புது நியமனம்!!!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது நிர்வாகச் சபையிலும்