30 வினாடி சந்தோஷம் கொடுப்பது என் வேலையில்லை: ரசிகருக்கு சாட்டையடி பதிலளித்த தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரை ’உங்களுக்கு 30 நிமிட சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நான் இல்லை’ என்று சாட்டையடி பதில் கொடுத்த நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
’எதுவும் நடக்கும்’ என்ற தமிழ் படத்திலும் பல மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை அபர்ணா நாயர். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து உரையாடி தனது கருத்துக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது முகநூலில் ரசிகர்களிடம் உரையாடியபோது, வக்கிர எண்ணம் கொண்ட ரசிகர் ஒருவர் இவருடைய முகநூல் பக்கத்தில் ஆபாசமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். இதனை அடுத்து பொங்கி எழுந்த அவர் கூறியதாவது: என் மீது அக்கறை கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உங்கள் வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதுபோல் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை.
ஆபாசமான வக்கிர எண்ணம் கொண்ட ரசிகருக்கு சாட்டையடி பதில் கூறிய அபர்ணா நாயுடுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout